Pages

Apr 28, 2013

ஒபாமாவுக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தமை தொடர்பில் ஒருவர் கைது






மெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஏற்பட்ட 
குண்டுவெடிப்பைத் தொடர்ந்துஅமெரிக்க 
ஜனாதிபதி ஒபாமா உட்பட சில
 முக்கிய பிரமுகர்களுக்குவிஷம் தடவப்பட்ட கடிதம்
 வந்தது.



அதனை அனுப்பியவர் குறித்த தகவல்கள் இன்னும்
 தெளிவாகத் தெரியாத நிலையில் அமெரிக்க பொலிஸார்
 நேற்று மிசிசிபியைச் சேர்ந்த எவரெட் 
டட்ச்ஸ்கி என்ற தற்காப்புக்கலை பயிற்சியாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

டுயுப்லோவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டபின் அவர்
 இராணுவத் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.


உயிரியல் பொருட்களை ஆயுதமாக உபயோகிக்க ஏதுவாக இருக்கும் வண்ணம்,
 அவர் இத்தகைய பொருட்களின் முகவர் உரிமம் பெற்றுள்ளார் என்று கருதப்படுகின்றது.

ஜனாதிபதியின் கடிதத்தில் தடவியிருந்த ரெசின் என்பது விளக்கெண்ணைய்
 செடியிலிருந்து எடுக்கப்படுவதாகும்இது சயனைடைவிட 6,000 மடங்கு அதிக 
விஷத்தன்மை கொண்டது.

அதேபோல் அமெரிக்க அரசால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பின்னர் வெளிவிடப்பட்ட
 நபர் ஒருவருடனும் இவருக்குத் தொடர்புள்ளதாகக் கூறப்படுகின்றது

இரண்டு நாட்களாக தீவிர கண்காணிப்பிற்கு உள்ளான எவரெட்டின் வீட்டில்அவர்
 நேற்று கைது செய்யப்பட்டதாகவும்41 வயதான எவரெட்திங்கட்கிழமை அன்று
 மிசிசிபி நீதிமன்றத்தில்
 ஆஜர் செய்யப்படுவார் என்றும் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தில் கூறப்பட்டது.

இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இவர் ஆயுள் தண்டனையும்,
 2,50,000 டொலர் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment