Pages

Apr 21, 2013


'நல்ல நேரத்தில் வடக்கு தேர்தல்: ஜனாதிபதி'

வடமாகாண தேர்தல் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்றும் அதற்கான
நல்லநேரம் பார்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெலிஓயா வளநிலையத்தில் நேற்று சனிக்கிழமை மகாவலி காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைக்கும் வைபவத்தில்  கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'எனது ஜோதிடர் எனக்கு வழங்கியிருக்கும் நாள் மற்றும் நேரத்தில் கட்டாயமாக வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும்'. 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் நிறுவப்பட்டதன் பின்னர் வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகதான் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'வெளிநாடுகளில் இருந்து பணம் வரும்வரையிலும் காத்துக்கொண்டிருக்காமல் இந்த நாட்டு மக்களின் பணத்தில் அபிவிருத்தி திட்டங்களையும் வேலைகளையும் முன்னெடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிகரெட் விலைகள் அதிகரிக்கப்படும் போது எவரும் கூச்சலிடுவதில்லை. அதேபோல விற்பனையும் குறைவடைவதில்லை. எனினும் மின்சார கட்டணத்தை அதிகரித்தமையினால்; கூச்சலிடுகின்றனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நெல் விற்பனை சபை விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல்லை கொள்வனவு செய்யவேண்டும். எனினும் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திவைத்துள்ள முதலாளிமார்கள் விவசாயிகள் போல நடித்து கூடிய விலையில் நெல்லை விற்பனை செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment