இரு சிறுபான்மை இனத்தவரை உப ஜனாதிபதிகளாக நியமிக்க வேண்டும் – சோபித தேரர்/
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழித்து சம்பிரதாய பூர்வமான ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தி இரண்டு சிறுபான்மை இனத்தவரை
உப ஜனாதிபதிகளாக நியமிப்பதற்கான அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள
வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
.
மேலும் அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆக மட்டுப்படுத்தி கட்சி மாறும்
எம்.பி.க்களின் பதவியை பறிக்க வேண்டுமென்றும் அவ் இயக்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
.
அவ்வியக்கத்தின் தலைவரான மாதுளுவாவே சோபித தேரரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
.
மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகள் நாட்டு மக்கள் என அனைவரும் இலங்கைக்கு
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை தேவையில்லை என எதிர்க்கின்றனர்
எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment