Pages

Apr 15, 2013

சிறைக் காவலாளிகளுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும் : அமைச்சர் கஜதீர


சிறைச்சாலை காவலாளிகளுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை காவலாளிகளுக்கு ரி-56 வகையான துப்பாக்கிகளே தற்போது வழங்கப்பட்டுள்ளன. எனினும் எதிர்காலத்தில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை தடுக்கும் நோக்கில் அதி நவீன வகையான ஆயுதங்கள் வழங்கப்படும்.
இதேவேளை, கண்ணீர்ப்புகை உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு தேவையான தற்காப்பு ஆயுதங்களுக்கான கேள்வி அறிவித்தல் விடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment