மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து 10 வெளிநாட்டுப் பிரஜைகள் தப்பியோட்டம்
வெளிநாட்டுப் பிரஜைகள் பத்துப்பேர் மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசா கலாவதியாகி தங்கியிருத்தல், சட்டவிரோதமாக நாட்டுக்குள்
பிரவேசித்தல் மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபடல் போன்ற
குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில்
தடுத்து வைக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளில் பத்துப் பேரே இவ்வாறு தப்பிச்
சென்றுள்ளனர்.
எனினும் அவர்களை குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நேரில் சென்று
பார்வையிடுவதில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள சில பாதுகாப்பு
துறையினர் வெளிநாட்டவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை வெளியேற
அனுமதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களில் இவ்வாறு 10 வெளிநாட்டவர்கள்
முகாம்களில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் பாகிஸ்தான் ஊடகவியலாளர்
உள்ளிட்ட நான்கு பாகிஸ்தானியர்களும் தப்பிச் சென்றவர்களில் அடங்குவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
மிரிஹான தடுப்பு முகாமில் அதிகளவான சனநெரிசல் நிலவுவதனால் வெளிநாட்டுப்
பிரஜைகளை தடுத்து வைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த முகாமில் 70 பேரை தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும் தற்போது
100க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment