கத்தார் - இலங்கை மஜ்லிஸின் ஏற்பாட்டில் சொற்பொழிவு (படங்கள் இணைப்பு)

கத்தார் - இலங்கை மஜ்லிஸின் (SLMQ) ஏற்பாட்டில், கத்தார் நாட்டிற்கு வருகை தந்துள்ள இலங்கையின் பிரபல மார்க்கப் பிரசாரகர் அஷ்ஷெய்க் யூசுப் (முப்தி) அவர்களினால் "இன்றைய சவால்களும் - முஸ்லிம் உம்மத்தின் பொறுப்புக்களும்" என்ற தலைப்பிலான சொற்பொழிவு இடம்பெற்றது. பெருந்திரளான இலங்கை - இந்திய தமிழ் மொழி பேசும் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வு ஏப்ரல் 5ம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து Industrial Area, Street# 02 இல் (QNB இற்கு அருகாமையில்) அமைந்துள்ள மஸ்ஜித்தில் நடைபெற்றது.

No comments:
Post a Comment