மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கு 1.5 கோடி ரூபா செலவில் நவீனமயம்!.
மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கு 1.5 கோடி ரூபா செலவில் நவீனமயப் படுத்தப்பட்டுள்ளது.அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வேண்டுகோளின் பேரில் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் கடந்த 2010ஆம் ஆண்டு இதற்கான நிதியை ஒதுக்கியிருந்தது.
இதற்கான அனைத்து முயற்சிகளையும் அப்போதைய அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் பொலிஸ் அத்தியட்சகருமான எச்.எல்.ஜமால்தீன் மேற்கொண்டிருந்தார்.
அப்போது கல்முனை மாநகர முதல்வராக பதவி வகித்த செனட்டர் மசூர் மௌலானாவின் துரித நடவடிக்கை காரணமாக மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கை நவீனமயப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை கல்முனை மாநகர சபை, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் கைச்சாத்திட்டிருந்தது
இதனைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர் செனட்டர் மசூர் மௌலானா, அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் பொலிஸ் அத்தியட்சகருமான எச்.எல்.ஜமால்தீன் ஆகியோரினால் அடிக்கல் நடப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் பிரகாரம் அமைக்கப்பட்ட மசூர் மௌலானா விளையாட்டுத் தொகுதி மற்றும் எச்.எல்.ஜமால்தீன் ஞாபகார்த்த பார்வையாளர் அரங்கு என்பன நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, அகில இலங்கை உதைப்பபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஹெர்லி சில்வீர, அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மற்றும் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இத்தகைய ஒரு பாரிய பணியை ஆரம்பித்து வைத்த அதன் பிதா மகன் முன்னாள் பொலிஸ் ஸ் அத்தியட்சகர் எச்.எல்.ஜமால்தீன் அவர்கள் இன்று நம்மத்தியில் இல்லா விட்டாலும் அவர் மருதமுனை மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் முழுக் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த விளையாட்டு வீரர்களினதும் இதயங்களில் நிச்சயம் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.
அதற்கு முத்தாய்ப்பாக அம்பாறை மாவட்டத்தின் முன்னணி விளையாட்டு மைதானமாக திகழ்கின்ற மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் எச்.எல்.ஜமால்தீன் ஞாபகார்த்த பார்வையாளர் அரங்கு எனும் பெயர் நாமம் பறைசாற்றி நிற்கின்றது.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீன் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை பரிசாக வழங்குவானாக!
அடிக்கல் நடும் வைபவ காட்சிகள்!
No comments:
Post a Comment