Pages

Apr 22, 2013


மடிக்கணினியில் மறைத்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இலங்கையர் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திய திருகோணமலை பகுதியைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் (32வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று (23) அதிகாலை இவர் சென்னை சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் இறங்கியபோது அவர் வைத்திருந்த மடிக்கணினி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை வாங்கி பார்த்த போது வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் காணப்பட்டது.

எனவே மடிக்கணினியை திறந்து பார்த்தனர். அப்போது தங்க பிஸ்கட்டுகளை தகடாக மாற்றி மடிக்கணினியில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. 6 தங்க தகடுகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

600 கிராம் எடை கொண்ட இந்த தங்க தகடின் மதிப்பு இந்திய ரூ.15 லட்சம் ஆகும். அதை பொலிஸார் பறிமுதல் செய்து முகம்மது ரியாசை கைது செய்தனர்.(AT)  

No comments:

Post a Comment