Pages

Apr 22, 2013


போலி தங்கத்தை அடகு வைத்து 11 லட்சம் மோசடி செய்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

போலி தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து நிதி மோசடி செய்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து இரு பெண்களும் ஒரு ஆணும் நேற்று (22) மாலை கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 10 தங்க வலயல்கள் மீட்கப்பட்டன.

எனினும் அவை போலியானவை என கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பத்தரமுல்ல, கட்டுபெத்த, ஹோமாகம, கொட்டாஞ்சேனை, கொட்டிகாவத்தை, மஹரகம மற்றும் நுகேகொட ஆகிய நகர வங்கிகளில் போலி தங்க நகைகள் அடகு வைத்து 11 லட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (23) புதுக்கடை இலக்கம் 03 நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரரணகளை மேற்கொண்டு வருகின்றனர். AT

No comments:

Post a Comment