சிரியா தலைநகர் டமஸ்கஸிலுள்ள பல்கலைக்கழகமொன்று மீது தாக்குதல்.

மோட்டார் தாக்குதலொன்றே நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் முற்றாக சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டமஸ்கஸில் அரச படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையிலான மோதல்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அண்மைக்காலமாக மோட்டார் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சிரியா தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமையும் டமஸ்கஸின் மத்திய பகுதி மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் குறித்த பல்கலைக்கழகத்தின் அண்மையில் மோட்டார் குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிரியா கிளர்ச்சியார்களினால் இரசாயன தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
எனினும் இரசாயன தாக்குதல்களை நடாத்துவதற்கான வசதிகள் தம்மிடம் இல்லையென கிளர்ச்சிக்கு குழு தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment