Pages

Mar 14, 2013

மீள் நிர்மாணம், நல்லிணக்கம், மனித உரிமை செயற்பாடுகளில் இலங்கை பாரிய முன்னேற்றம்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டு
மீள் நிர்மாணம், நல் இணக்கப்பாடு, மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையின் செயற்பாடுகளை ஜப்பான் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஸ்ஹிடா தெரிவித்துள்ளார். பூமியதிர்வு, சுனாமி தாக்குதல்களின் போது இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், ஜனாதிபதியின் ஜப்பானிய விஜயம் மூலம் இலங்கை - ஜப்பான் உறவுகள் மேலும் பலமடைவதாக கூறினார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் பணிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் கூறினார். ஜப்பான் நாடும், நாட்டு மக்களும் 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது வழங்கிய உதவி ஒத்தாசைகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட அபிவிருத்திகளையும் விளக்கினார்.
யாழ்ப்பாணத்தில் புதிய ஆஸ்பத் திரியை நிர்மாணிக்க ஜப்பான் வழ ங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்தார். ஜப்பானிய ஜனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சின் குழுத் தலைவருமான கட்ஸ்யுசி சுவாய்யும் ஜனாதிபதியைச் சந்தித்தார். அண்மைக் காலங்களில் இலங்கை மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற் றத்தை அடைந்து வருவதாகக் கூறிய அவர்,
ஜனாதிபதியின் மாபெரும் தலைமைத்துவம் காரணமாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், நிமல் சிறிபால டீ சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உட்பட இலங்கை அதிகாரிகளும், வர்த்தக தூதுக் குழுவொன்றும் இவ்விஜயத்தில் பங்கேற்றுள்ளது.(எப். எம்.)

No comments:

Post a Comment