Pages

Mar 14, 2013

இலங்கையில் இன்றுள்ள நிலமைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் -ஹுனைஸ் பாறுக் 

தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தினரான இனவாத சிங்கள அமைப்புக்களால் முன்னெடுத்துவரும் விசமத்தனமான பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பில் தமது கடுமையான ஆட்சேபனையினை புலம் பெயர் முஸ்லிம் அமைப்புக்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.

 இந்த நிலை இலங்கையில் தொடர்வதை அனுமதிக்க வேண்டாம். இது குறித்து இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்துள்ளதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment