வறுமையான நிலையிலுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களை இணங்கண்டு அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மிக விரைவில்
வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக அகில இலங்கை சோனகர் சங்க பிராந்திய கிளை தலைவர் ஏ.அப்துல் கையூம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்
அம்பாரை மாவட்டத்திலுள்ள தாய் தகப்பனை இழந்த மிகவும் வறுமையான நிலையிலுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களை இணங்கண்டு அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அதற்காக மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் தற்போது சோனகர் சங்கத்தினூடாக தகவல் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அம்பாரை
பிராந்தியத்தில் சோனகர் சங்கத்தினால் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக கல்வி அபிவிருத்திக்கு
முக்கியத்துவம் கொடுக்கப்படடு வருவதாகவும் தலைவர் தெரிவித்தார். இதனால்
கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் காணப்படும் பிள்ளைகளின் கல்வி நிலையினை
அபிவிருத்தி செய்யமுடிவதோடுஆரோக்கியமாக ஒரு சமூகத்தினை தங்களால்
கடடியெழுப்ப முடியும் என தான் நம்பிக்கை கொள்வதாகவும் அவர் மேலும்
தெரிவத்தார்.
rg;dp m`k;;l;
No comments:
Post a Comment