Pages

Feb 18, 2013

நெல் அறுவடையில் ஈடுபட்ட தமிழ் நாட்டவர்கள் கைது.

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து பாலமுனை வயல் பிரதேசத்தில் வேளாண்மை வெட்டும் இயந்திரத்தில் வேலைசெய்து கொண்டிருந்த மூன்று தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (18) காலை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹயா முகைடீன் தெரிவித்தார்.
புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பாலமுனை வயல் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் இன்று ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


No comments:

Post a Comment