Pages

Feb 15, 2013

அம்பாரை மட்டக்களப்பு பகுதிகள் வெள்ளத்தில். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையினால் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 400 குடும்பங்களை சேர்ந்த 1,439 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 20 குடும்பங்களைச்சேர்ந்த 73பேர் இடம் பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3964 குடும்பங்களை சேர்ந்த 12,515 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 8,320 குடும்பங்களை சேர்ந்த 33,321 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணித்தியாலயங்களில் 162.0 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
அத்துடன்.  அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கணத்த மழையினால் தாழ் நிலப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால்; மக்கள் பெரும் அசௌரியங்களுக்குள்ளானார்கள்; .மழை தொடர்ந்தும் பெய்து வருவதனால் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக கோணாவத்தை ஊடாக கடலை நோக்கி முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீரை கடலுக்குள் அனுப்ப அட்டாளைச்சேனை பிரதேச சபை நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றது.பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர்.ஏ.எல்.தவம் ஆகியோர்  வெள்ளத்தை பார்வையிடுவதையும் காணலாம்.

  @ zafny 

NEWS LINE INFO  (I.M)

No comments:

Post a Comment