Pages

Feb 13, 2013

அக்கரைப்பற்று மற்றும்   அட்டாளைச்சேனையில்  காலம்சென்ற கோட்டக்கல்விப்பணிப்பாளர் மற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கான துஆ பிரார்த்தனை.  

 

(I .M ) 

அக்கரைப்பறில்

  காலஞ்சென்ற அட்டாளைச்சேனைக் கோட்ட கல்வி அதிகாரி என்கேஎம்.இப்றாகீமின் நினைவுதின நிகழ்வுகள்.


அக்கரைப்பற்று வலயத்தின் அனுசரனையுடன் காலஞ்சென்ற அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்வி அதிகாரியான மர்ஹூம் அல்ஹாஜ். என்கேஎம். இப்றாகீம் அவர்களின் ஞாபகார்த்த கூட்டம் இன்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வலயக் கல்வி பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம். காசீம் தலைமை வகித்தார். பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வி அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் காலஞ்சென்ற கல்வி அதிகாரி அவர்களின் இணைபிரியாத நண்பர்களான ஓய்வுபெற்ற கல்வியதிகாரிகளான யு.எம். வாஹிட், எஸ்.எல்.ஏ. றசாக் மற்றும் அன்னாரது மூன்று ஆண் பிள்ளைகளும் கலந்து கொண்டனர். மௌலவி அஷ்ரப் அவர்களால் விசேட துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது. நினைவு தின விடேச மலர் ஒன்று ஆசிரிய ஆலோசகரான எஸ்.எல். மன்சூர் அவர்களால் வெளியிடப்பட்டது. அதனை ஆசிரிய ஆலோசகர் என்.எம். சம்சுதீன் அவர்கள் வாசித்தார்.

   

 

 

அட்டாளைச்சேனையில் 

                                     அட்டாளைச்சேனை கோட்ட அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் 

அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய வேளை இறையடி எய்திய என்.கே.எம்.இப்றாகிம்,அதிபர் சேவையில் உள்ள எஸ்.எல்.எம்.நயீம்,ஆசிரியர் எம்.ஏ.முபாறக் ஆகியோரை நினைவு கூரல் வைபவமும்,துஆப் பிராத்தனையும் கடந்த ஞாயற்றுக்கிழமை (10)  அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் நடைபெற்றது.

கோட்டக்கல்விப்பணிப்பாளல் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அகமட்கியாஸ்,வலயக்கல்விப்பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசீம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,கிழக்கு மாகாணவீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஆகியோர் இறையடி  எய்தியவர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.பின்னர் நண்பர்கள் சார்பாக ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றசாக்,அதிபர்கள் சார்பாக எம்.ஐ.எம்.அப்துல் ஸலாம். உரையாற்றினார்கள்,ஆசிரிய ஆலோசகர் மௌலவி யு.எம்.நியாஸியினால் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டன.
 நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி அல்ஹாபீஸ் என்.எம்.அப்துல்லா,
ஏறாவூர் பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹானீபா,
சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எல் அனீஸ்
ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர்களான யு.எம்.வாஹிட்,
எஸ்.எல்.ஏ.றசாக் மற்றும் வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள்,
உத்தியோகத்தர்கள்,அதிபர்கள்,பிரதிஅதிபர்கள்,குடும்ப உறவினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

  

 

 

 

 

@சப்னி  (நியூஸ் லைன் இன்போ NEWS LINE INFO)

No comments:

Post a Comment