சவுதி தனவந்தரால் வழங்கப்பட்டு ரிசானாவின் தாய் ஏற்க மறுத்த 10 லட்சம் ரூபா குறித்து விரைவில் இறுதி முடிவு
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின்
குடும்பத்திற்கு உதவுவதற்காக சவூதி தனவந்தரினால் வழங்கப்பட்ட 10 லட்சம்
ரூபா நிதியுதவி தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா
தெரிவித்தார்.கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட
சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ்
அல் ராசிட் 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.
இந்த நிதி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம்
காத்தான்குடியிலுள்ள அவரின் அலுவகத்தில் வைத்து சவூதி பிரஜையினால்
கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது மகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவூதி அரேபியாவினால்
வழங்கப்படும் எந்தவித உதவிகளையும் ஏற்கமாட்டோம் என ரிசானாவின் தாயான பரீனா
நபீக் அறிவித்திருந்தார்.
இதனால் குறித்த நிதியை இதுவரை ரிசானாவின் குடும்பத்திடம் வழங்கப்படவில்லை எனவும், இந்த பணத் தொகையினை உரியவரிடம் திருப்பி அனுப்பவே நான் முடிவு செய்திருந்தேன் எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இதனால் குறித்த நிதியை இதுவரை ரிசானாவின் குடும்பத்திடம் வழங்கப்படவில்லை எனவும், இந்த பணத் தொகையினை உரியவரிடம் திருப்பி அனுப்பவே நான் முடிவு செய்திருந்தேன் எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
எனினும் குறித்த பணத்தை திருப்பி அனுப்ப வேண்டாம் என திருகோமணமலை
மாவட்டத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் ரிசானாவின் உறவினர்கள்
தன்னிடம் வேண்டிக்கொண்டதனால் இந்த பணம் இதுவரை திருப்பி அனுப்பப்படவில்லை.
இது தொடர்பான விரைவில் இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.
@ zafny ahamed
News Line Info(t.w)
No comments:
Post a Comment