Pages

Dec 1, 2013

அடுத்தடுத்த தேர்தல்களில் புதிய கூட்டணி களமிறங்குவது தொடர்பில் திரைமறைவிலான பேச்சுக்கள் ..

இலங்கையில் அடுத்து நடத்தப்படும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேக்கா, ஆர்.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து தற்போது திரைமறைவிலான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அரசியல் கூட்டணியில் இணையும் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடாது புதிய கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பிலான சில சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தப் புதிய கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுவதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்தப் புதிய கூட்டணியில் இணையவதா? இல்லையா? என்பது பற்றி ஜே.வி.பி இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment