Pages

Nov 6, 2013

இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி (Post –War development in Srilanka)

எம்.பி.எம்.சுபியான்,
சமூகவியல் விசேடதுறை
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம்.

ன்றைய உலகில் பெரிதும் பேசப்படுகின்றதும் மிகவும் அவசியமெனஉணரப்பட்டுவருவதுமான அபிவிருத்தியானது இன்றியமையாத ஒன்றாக வலுப்பெற்று வருகின்றது. அவ்வகையில் மேற்படி யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி பற்றி மூன்று தாசப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமையால் இன்றைய உலகிற்கு  முன்னுதாரணமாகவும் அது பற்றிய விளக்கங்களை சர்வதேச நாடுளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற விமர்சனத்துக்கும் உட்பட்டுள்ள  இலங்கையினை மையப்படுத்தியதாக நோக்கவருகின்றது. அனர்த்தங்களில் ஒன்றாக காணப்படுகின்ற யுத்தமானது இலங்கையில் மக்களின் இயல்பு வாழ்கை, உயிரிழப்பு, வீடு, சொத்து, வாழ்வாதாரம், கலாசாரம், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், போக்குவரத்து, தொடர்பாடல், என்பவற்றை அடியோடு அழித்தது யாவரும் அறிந்ததே எனவே யுத்தம் இடம்பெற்று முடிவடைந்தால் இவற்;றில் இருந்து மக்களை பாதுகாத்து அவர்களின் நிலையினை வழமைக்கு கொண்டு வருவதில் மட்டும் நின்று விடாது அவர்களின் எதிர்காலம் பற்றிய அபிவிருத்தி திட்டங்களை தீட்டுவதிலும் முனைப்புடன் செயற்பட்டு வரும் இந்நிலையில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் இலங்கை தள்ளப்பட்டிருப்பினும் மக்களின் இயல்பு வாழ்கை, உயிரிழப்புக்கள், வீடு, சொத்து, வாழ்வாதாரம், கலாசாரம், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், போக்குவரத்து, தொடர்பாடல், என்பற்றை விருத்தி செய்வதில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நடவடிக்கைகள் பற்றியும், அதன் தன்மை பற்றியும், அது அம்மக்களின் வாழ்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் பற்றியும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்து 'இந்து சமுத்திரத்தின் முத்து' என்ற சிறப்புப் பெயரையுடைய தீவே இலங்கை. இது பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடாகும்;. இங்கு சிங்களவர்கள், இலங்கை தமிழர், இந்தியத் தமிழர்கள், முஸ்லிம்கள்;, கிறிஸ்தவர்கள் வாழுகின்றனர். இந்நாடு 'இந்து சமுத்திரத்தின் முத்து'இ 'நித்திலம்' என்ற பெயர்களுக்கேற்றவாறே அதிகமான அழகிய நீர்வீழ்ச்சிகள் உல்லாசப்பயணிகளை கவரும் இயற்கை காட்சிகள் என்ற வனப்புகளைப்பெற்றும், நீர்வளம், நிலவளம், வரலாற்று இடங்கள், அழகிய மலைகள் என்ற வளங்களைப் பெற்றும், இயற்கை துறை முகத்தை சொத்தாகவும் கொண்டுள்ள ஒரு நாடு. ஒரு காலகட்டத்தில் வர்த்தகத்தின் கேந்திரமையமாக திகழ்ந்து வேலை வாய்ப்பு நிலையிலும், தலாவருமானத்திலும் உச்சத்தில் நின்றநாடு என்றால் அது பொய்யில்லை. 1962 யில் சிங்கப்பூர் ஜனாதிபதி லீகுவான் இலங்கைக்கு வந்த போது இலங்கை சிங்கப்பூரை விட பத்து ஆண்டுகள் முன்னேற்றம் கொண்ட நாடாகவுள்ளது என அவரே ஒப்புக் கொண்டார். ஆனால் இன்று அதே சிங்கப்பூர் நாட்டை விட

60 ஆண்டுகள் பின்தங்கியதாகவுள்ளது. இதற்கு இலங்கையில் இடம்பெற்ற பல சீர்கேடுகளில் மிக மோசமான இரு வேறு mdh;j;jq;fNs fhuzkhFk;.

இலங்கையின் வனப்பை சீர்குலைத்து, சமுகக்கட்டமைப்பை சீர் அழித்து மக்களது வாழ்வை அடியோடு உலுக்கிய இவ் இரண்டு முக்கிய அம்சங்களாக 2004.12.26 சுனாமியையும், அண்மையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தினையும் கூறலாம். இரண்டும் இருவேறு அனர்த்தங்களாயினும் சுனாமி ஏற்படுத்திய தாக்கத்தைவிட யுத்தமானது மீளமுடியாத மீள்வதற்கு நீண்டகாலம் தேவைப்படும் அளவான பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

அவ்வகையில் யுத்தம் என்னும் போது 'வளங்கள், அதிகாரம், நலன்களை அடையும் பொருட்டு இரண்டு குடி பெருந்தொகை மக்களுக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் இடம் பெறும் போராட்டமாகும்' இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் என்னும் போது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம் பெற்ற யுத்தத்தினைக்

குறிக்கின்றது. சர்வதேச மட்டத்தில் நீடித்த தீர்க்கப்படாத முக்கிய முரண்பாடாக இலங்கையின் இனமுரண்பாடானது விளங்கியது. இவ் முரண்பாடானது காலணித்துவ காலத்திலிருந்து வடிவம் பெறத்தொடங்கி ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப்பின்னர் பெப்ரவரி 04. 1948 இல் இலங்கை விடுதலைபெற்றது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சுமுக நிலையில் இருந்துவந்த தமிழ், சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள் சிறிது சிறிதாக சீர்கெடத் தொடங்கின. இனமுரண்பாடுகளின் வெளிப்பாடுகள் அரசியல் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் காணப்பட்டன. ஐரோப்பிய குடியேற்றவாத காலங்களிலும், அதற்கு முன்னரும் சிங்கள சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சரிசெய்வதாகக் கூறிக் கொண்டு சிங்கள அரசியல் வாதிகளுடன் இனப்பாகுபாடு இன ஒழிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தமிழ் அரசியல் வாதிகளும், போட்டி போட்டுக் கொண்டு காழ்ப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டார்கள். 1958யிலிருந்து இனக் கலவரங்கள் அடிக்கடி நிகழத்தொடங்கின. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்;ட சிங்களம் மட்டும் சட்டமும், 1972 மற்றும் 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடியரசு அரசியல் யாப்புக்களும், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், வேலை வாய்ப்பு ரீதியாகவும் சிங்களவர்களை முதன்மைபடுத்தியமையும் போன்ற காரணங்களினால் 1980 களில் துளிர்விட்ட முரண்நிலை LTTE என்ற அமைப்பின் தோற்றத்திற்கும், 1983 களில் பெருங்கலவரத்தினையே உண்டு பண்ணி ஜுலைக்கலவரம் மற்றும் 1990 க்குப்பின்னர் உக்கிரமடைந்த இலங்கை யுத்தமானது 2009ல் தற்போதைய ஜனாதிபதியினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் அபிவிருத்தி ரீதியிலும் சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வி ரீதியிலும் ஏற்படுத்திய அழிவு பாரியளவிலானது. சர்வதேச மட்டத்தில் நீடித்த தீர்க்கப்படாத முக்கிய

முரண்பாடாகவும் இலங்கையின் இனமுரண்பாடானது விளங்கியது.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை மையப்படுத்தியதாகவே யுத்தம் இடம்பெற்றது. யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் அதாவது மூன்று தசாப்தமாக இங்கு வாழ் மக்களுக்கு அபிவிருத்தி என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது இதற்கு காரணம் விடுதலை புலிகளின் ஆயுதபலமும், அரசாங்கம் புலிகளை மீறி எதனையும் செய்யமுடியாமையும் காரணமாக அமைந்தன.

இலங்கையில் இத்தகைய யுத்த அனர்த்தமானது வடகிழக்கில் 30000 பேரை அங்கவீனராக்கி உள்ளது. இதேபோன்று யாழ் மாவட்ட 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தமாக 25773 பெண்கள் கணவனை இழந்துள்ளதாகவும்

மேலும் கணவனை இழந்தவர்களில் 16 வயதிற்குட்பட்ட 09 பேரும், 17 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட 937 பேரும், 31 முதல் 50 வயதிற்குட்பட்ட 7989 பேரும், 50 வயதிற்கு மேற்பட்ட 16838 பேரும் உள்ளனர். இந்த விதவைகளின் உற்பத்தி கிழக்கிலேயே அதிகமானது. கிழக்கில் படுகொலை அரசியல் அன்றாட அரசியல் நிகழ்வாக காணப்பட்டது. பெண்களின் விதவை கோலத்திற்கப்பால் பொருளாதார ரீதியான சமூக சிதைவும், புதிய தலைமுறையும், நலிவுற்ற வாழ்க்கை தீர்வுக்கான வக்கற்ற ஒரு சமூகமாகவும் பரிணமித்தன. கிழக்கு மாகாணத்தில் 40 வீதமான மான பெண்கள் வலது குறைந்தவர்களாக உள்ளனர். மேலும் வடகிழக்கு கல்வியை எடுத்தால் அதன் பாதிப்பு அகலமானது. யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் உள்ள 2008 பாடசாலைகளில் 156 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வீதமானமான மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. மேலும் உளவியல் தாக்கம் என்பதும் மிகவும் அதிகபடியானதாகவே இருந்துள்ளது. பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். வகுப்புக்களோ தேர்வுகளோ எது நடந்து கொண்டிருந்தாலும் விமான சத்தம் கேட்டால் எழுந்து ஓடி பதுங்கு குழிக்குள் இறங்கிவிட வேண்டுமென்பது குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது.

60 வீதமான வீதிகள், 10 புகையிரத பாலங்கள், 29 புகையிரத நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளது. மேலும் யாழ்குடா நாட்டில் மட்டும் சுமார் 4509 ஹெக்டயர் செய்கை நிலப்பரப்பு உவர் நிலமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் 500000 தென்னைமரங்கள் அழிந்துள்ளன. அதுமட்டுமன்றி இடப்பெயர்வும்

முக்கியமான ஒரு காரணியாகும். தங்கி வாழ்வோர் தொகை சடுதியாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது கணவனை இழந்த பெண்களும், பெற்றோரை இழந்த பெண்களினதும், முதியோரினதும் தங்கி வாழ்வோர் தொகை அதிகரித்தமையினை கவனிக்க முடிகின்றது. இவர்களில் அதிகமானோர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதுடன் நிவாரணப் பொருட்களில் தங்கி வாழ்கின்றனர். மீனபிடி உபகரணங்களின் சேதம் 198245 மில்லியன் ரூபாவாகும். இதைவிட 12 ஐஸ் தொழிற்சாலைகள், வள்ளம் கட்டும் இடங்கள் எனது அனைத்தும் அழிக்கப்பட்டன. வன்னிப்பகுதியில் பெரிய ஆறுகளில்லை. குளங்களும், மழைநீர் பெற்று ஓடும்; ஆறுகளே உண்டு. யாழ்குடா மட்டும் 48000 மெட்றிக் தொன் மீன் உற்பத்தி செய்தது. ஆனால் இது 2002ல் 5000 மெட்றிக்தொன் உற்பத்தி செய்யும் ஆற்றலை கொண்டதாக நலிவுற்றது. யாழ்குடா நாட்டில் 1989ல் மீனவர்கள் 111777பேர் காணப்பட்டனர். 2000ம் ஆண்டில் இது 31159 பேராக குறைந்து போனது. 1995இற்கு முன் 7466 மீனவர்களின் மீன்பிடி படகுகள் சேதமாக்கப்பட்டது. மொத்த மீன்பிடி படகு மற்றும் உபகரணங்களின் சேதம்182.45 Nfhb &ghthFk;.

இதனால் சமையல் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீருக்காக நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சராசரி மனிதனுக்கு சமையல் மற்றும் சுய சுகாதார தேவைகளுக்காக 8 லீற்றர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது அணைகளுக்கு அருகிலோ அல்லது துப்பரவற்ற கிணறுகளுக்கு அருகிலோ உள்ளவர்களில் சிலர் அந்த தண்ணீரையே சமையல் குளியல் மற்றும் பிற தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். இது நோய் பரவும் தன்மையில் முக்கியமான ஓர் அதிகபடியான சுகாதார முறைகேட்டை தோற்றுவிக்கின்றது. அருகில் கழிவறை வசதிகள் அற்றவர்கள் தங்களின் கழிவுகளை வெளியேற்ற அகழிகள் உருவாக்க வேண்டும். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் இழந்த சொத்துக்களின் பெறுமதி 11 கோடி டொலர் என மதிப்பிடப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் 45000 ஏக்கர் நிலத்தை புலிகளிடம் இழந்துள்ளனர். மொத்தமாக 21614 குடும்பத்தை சேர்ந்த 102867 நபர்களேயே புலிகள் வெளியேற்றினர். தமது சொந்தவீடு, நிலம், வியாபார நிலையங்கள் போன்றவற்றுடன் சொந்த 3537 வீடுகளை முழுச் சொத்துடன் இழந்தனர். வன்னியில் இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட தாக்கமானது நினைத்துப்

பார்க்க முடியாத அளவுக்கு பாரிய எண்ணிக்கையிலான இளம் வயது பெண்களே குடும்பத்தை பராமரிக்கும் நிலைமைக்கு தள்ளிவிட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே


மேலும், 1987-1998 வரையான காலபகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரம் 56000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் 34000க்கம் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.மேலும், 

  • நேரடியான போருக்கான அரசின் செலவு 21232 கோடி ரூபா
  • பொதுசன பாதுகாப்பு மேலதிக செலவு 4000 கோடி ரூபா
  • புலிகளின் போர்ச் செலவு 4200 கோடி ரூபா
  • இடப்பெயர்வு சம்பந்தப்பட்ட செலவு 3800 கோடி ரூபா
  • 1987 வடகிழக்குப் புனர் நிர்மானச் செலவு 1040 கோடி ரூபா
  • 1995 வடகிழக்கு புனர் நிர்மானச் செலவு 4900 கோடி ரூபா
  • வீடுகள் புனர் நிர்மானம் 1010 கோடி ரூபா
  • வடகிழக்குக்கு வெளியே அழிவுகள் 11230 கோடி ரூபா
  • வடகிழக்கு வெளியே வீடமைப்பு 450 கோடி ரூபா
  • 1995 க்குப் பின் 2480 கோடி ரூபா
  • தொழில் நிபுணர்கள் காரணமாக இழப்பு 11250 கோடி ரூபா
  • வடகிழக்கு உறபத்தி, உல்லாசப்பயணத்துறை 130642 கோடி ரூபா
மேலும் பல செலவுகளுடன் 1998 வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் 282394 கோடி ரூபாவுக்கு மேல் அழிந்துள்ளது. (பி. இரயாகரன்-2002)

இங்ஙனமாக சமூக கட்டமைப்பையும், பொருளாதாரத்தினையும் பெரிதும் பாதித்து அபிவிருத்தியை தடை செய்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது மஹிந்த ராஜபக்ஷவினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னுள்ள தற்போதைய தொனிப்பொருளாக யுத்தத்திற்குப் பிந்திய அபிவிருத்தி நோக்கத்தக்கது. இதில் அரசும் கடும் பிரயத்தனம் கொண்டு செயற்படுவதனை காணலாம். தற்போதைய அரசியல் பேச்சுக்களாக குறிக்கோளாக அமைவது யுத்தத்திற்குப் பிந்திய அபிவிருத்தி என்பதே. இங்ஙனம் மஹிந்த சிந்தனை இதில் முக்கிய இடத்தை பெறுகின்றது. யுத்தத்தின் பிந்திய அபிவிருத்தி என்பது இதன் முக்கிய தொனிப்பொருளாகும். அதற்கிணங்க பல அபிவிருத்தி செயற்பாடுகள் இலங்கை அரசாலும் அரசசார்பற்ற நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி என்னும் போது அரசின் முக்கிய குறிக்கோளாக இலங்கையை ஆசியாவின் சொர்க்க பூமியாக, ஆசியாவின் கேந்திர நிலையமாக, ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவது

என்பதேயாகும். அவ்வகையில் பல அபிவிருத்திகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு இருக்க அபிவிருத்தி என்றால் என்னவென நோக்கும் போது, அபிவிருத்தி என்பது ஒரு பழமையான எண்ணக்கருவாகும். இவ்வெண்ணக்கருவை வரையறை செய்வதில் சிக்கல் தன்மை காணப்படுகின்றது. திரவமானது வேறான பாத்திரத்தில் எடுக்கப்படும் போது அதன் உருவம் பாத்திரத்தின் வடிவத்தை ஒத்ததாகக் காணப்படும். இவ்வாறு தான் அபிவிருத்தி என்பது ஒவ்வொரு துறையிலும் வௌ;வேறான பெறுமானங்களை பெற்றுவருகின்றது. அந்தவகையில், பொருளியல் துறையினை பொறுத்தவரை அபிவிருத்தி என்பது மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு எனவும், சமுகவியலை பொறுத்தவரை ஒரு சமுகத்தினுடைய பெறுமானத்தில் ஏற்படும் சாதகமான மாற்றம் எனவும் கொள்ளப்படுகின்றது. இவ்வாறே புவியியலில் அபிவிருத்தி என்பது உயிர்வாழ்வதற்கு தேவையான சூழலைக் கட்டியெழுப்புவது எனக்கருதப்படுகின்றது. எனவே அபிவிருத்;தி என்பதை எந்தத் துறைக்குள்

எடுக்கின்றோமோ அதன் வடிவத்தை அது பெறுவதாக அமையும்.

யுனஸ்கோ என்ற நிறுவனமானது 'அபிவிருத்தி என்பது பொருளாதாரம், சனத்தொகை போன்றவற்றில் மட்டும்மன்றி சமூக, பொருளாதார, கலாசார காரணிகளையும் இணைத்த ஒன்றாகும்' எனக் இவ்வாறான அபிவிருத்தியினை இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னர் நோக்கின் யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளை மீள நிர்மாணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களையும் சமுகத்தையும் மீள கட்டியெழுப்புவது யுத்தத்தின்

பின்னரான அபிவிருத்தி எனலாம். அதாவது போருக்கு முந்திய சூழலினை போருக்குப் பின் மீண்டும் ஏற்படுத்துவது இதுவாகும். இவ்யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி என்னும் எண்ணக்கருவானது சமானத்தை கட்டியெழுப்புதல் என்ற அடிப்படையிலேயே நோக்கப்படுகின்றது. யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தியில் மூன்று விடயங்கள் முக்கியமானவையாக காணப்படுகின்றன. அவை,

1. ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
2. கைது செய்யப்பட்ட விடுதலைப் போராளிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும்.
3. போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் சமுக பொருளாதாரத்தால் இணைக்கப்பட வேண்டும்.

மேற்கூறிய நடவடிக்கைகள் யுத்தத்தின் பின் நிகழும் போது அங்கு அபிவிருத்தியை கொண்டுவர முடிவதோடு பொருளாதார விருத்தியையும் ஏற்படுத்த முடியும். யுத்தமானது கிழக்கில் 2007ல் முடிவுற்றாலும் வடக்கில் 2009.05.19 அன்றே முடிவடைந்தது. இதன்பின்னரே பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள கட்டியெழுப்ப பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டில் வறுமையைக் குறைத்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி பொருளாதாரத்தினை வளர்ச்சியடையச் செய்வதோடு சிறந்த முறையில் உட்கட்டமைப்பு

வசதிகளை விருத்தி செய்வதோடு சமூக நலன்புரி அம்சங்களையும் மேலோங்க செய்ய வேண்டும் என்பதே இலக்காகும். அந்தவகையில் இலங்கையின் யுத்தத்தினால் பாதிபடைந்த பகுதிதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பல அபிவிருத்தி திட்டங்கள கொண்டுவரப்பட்டன. அதில் பிரதான இடம் பிடித்தவைகளில் கிழக்கினை மையப்படுத்திய கிழக்கின் உதயமும், வடமாகாணத்தை மையப்படுத்திய வடக்கின் வசந்தமும் ஆகும்.

அவ்வகையில் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் என்பது, 'இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டமாகும்' இத் திட்டமானது, இலங்கையின் 2009 ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டது. இவ் வேலைத்திட்டத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். இவ் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களைக் கொண்டதாகும்;.

1. முதலாம் கட்டம் - இடம் பெயர்ந்த மக்களின் கட்டாயத்தேவைகளை பூர்த்தி செய்தலும், மீள் குடியேற்றலும்.
2. இரண்டாம் கட்டம் - வடக்கின் உட்கட்டமைப்புக்களை செப்பனிடல்;. (இடைக்காலத் திட்டம்)
3. மூன்றாம் கட்டம் - தொழில் துறை அபிவிருத்தி திட்டங்கள். (நீண்டகாலத் திட்டம்) இதன் போது

கிழக்கின் உதயம் அபிவிருத்தி திட்டம் என்பது, 'சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் வரலாற்றை மாற்றிய போர் புலிப்பயங்கரவாதிகள் மாவிலாறு வான்கதவை மூடியதையடுத்து ஆரம்பமாகி 2007 யில தொப்பிக்கலையினை இராணுவத்தினர் விடுவித்ததையடுத்து அதிலிருந்து ஆரம்பமான திட்டமே கிழக்கின் உதயம் திட்டமாகும்.' இது கிழக்கு மாகாணத்தில உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய

இவ்விரு திட்டங்கள் ஊடாகவும் யுத்தத்தினால பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்;ள அபிவிருத்தி பணிகளை நோக்கும் போது, சுகாதார துறையை எடுத்து நோக்கும்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களிலுள்ள பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகள் புனரமைக்கப்படுவதோடு சாவகச்சேரி வைத்தியசாலையானது அரசின் 350 மில்லியன் நிதியுடன் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டது. 460 மில்லியன் ரூபாவை சுகாதார அபிவிருத்திக்கென அரசு வழங்கியிருந்தது. 110 மில்லியன் ரூபா யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கென அளிக்கப்பட்டது. 11 மில்லியன் செலவில் மானிப்பாய் மருத்துவமனை புணரமைப்பு செய்யப்பட்டது. அதேபோன்று அச்சுவேலி ஆயர்வேத வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது இலங்கையின் அனைத்து

பாகங்களிலுமுள்ள வைத்தியசாலைகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. (தினகரன் 11.10.2010)


உட்கட்டமைப்பு அபிவிருத்தியை எடுத்துநோக்கும் போது இது மின்சாரம், வீதி அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, பாலம் அமைத்தல், போக்குவரத்து விருத்தி, தொழிநுட்ப வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் போசாக்கு என்பனவற்றின் விருத்தியையே குறித்து நிற்கின்றது. இதற்காண நடவடிக்கைகள் மகநெகும,

கமநெகும, மாகாண சபைகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற திட்டங்களுடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமாகாண அபிவிருத்திக்கென 909 மில்லியன் நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 64 வீதிகளின் அபிவிருத்திக்கென 379 மில்லியன் ரூபாவும் 11 பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் அபிவிருத்திக்கென 26 மில்லியன் ரூபாவும் குடிநீர் வழங்கலுக்கு 250 மில்லியன் ரூபாவும் மேலதிக வலயங்களை மேம்படுத்த 34 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது (தினகரன் 11.10.2010)


வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட பல பகுதிகள் மின்சாரம் இல்லாதிருந்த நிலையில் அதனை ஏற்படுத்திக் கொடுப்பதற்காண நடவடிக்கைகள்

முன்னெடுக்கப்பட்டன. மேலும் கிழக்கின் உதயத்தினூடாக கிராமிய மக்களுக்கு 645 மின்சார திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு 171000 வீடுகளுக்கு புதிதாக மின்சாரம் வழங்க முடிந்தது. சகலருக்கும் மின்சாரம் என்ற தொனிப்பொருளில் கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையம், மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையம், நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் போன்றன அமைக்கப்பட்டன. மின் உற்பத்தியைப் போன்றே

மின்சாரத்தை விநியோகிப்பதற்கான 7600 திட்டங்கள் அரசால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி 11500 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

யுத்தத்தினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் மீள் நிர்மாணம் செய்யப்பட்டதோடு புதிய வீதிகள் அமைக்கப்பட்டன. முன்னர் பூநகரி (யு32) வீதி, யாழ்ப்பாணம் யு9 வீதி காபட் போடப்பட்டதுடன் கிராமிய வீதிக்கு கொங்றீட் போடப்பட்டது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான யாழ்தேவி ரயில் பாதை அமைக்கப்பட்டு செயலிழந்த ரயில் பயணம் மீண்டும் தொடரப்பட்டது. வடகிழக்கில் செயலிழந்த ரயில் தண்டவாளங்கள், ரெயில் நிலையங்கள் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் திட்டத்தினூடாகவும் புனரமைக்கப்படுகின்றன. வடக்கில் பாதிப்புற்ற காங்கேசந்துறை துறைமுகம் அரசின் 483 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி நடவடிக்கை உள்ளுர் விமான போக்குவரத்து போன்றவற்றிற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தியில் 220 மீற்றர் நீளமான றம்பொட சுரங்கப்பாதை, கடவத்தை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெந்தோட்டை பாலம், கிண்ணியா பாலம், மன்னம்பிட்டிய பாலம், கட்டுகஸ்தோட்டை பாலம் இன்னும் பல மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தியில் பாதிக்கப்பட்ட மக்களை மீள் குடியமர்த்துதல் அவர்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்தல், வாழ்வாதார உதவிகளை செய்தல், புனர்வாழ்வளித்தல், குறிப்பிட்ட காலத்துக்கு வருமானம் பெற வழி செய்தல் போன்றன அடங்குகின்றன. வடக்கின் வசந்தம் திட்டத்தினுடாக இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை 18 கோடி 50 இலட்சம் உலக வங்கியின் உதவியுடன் தமது சொந்த கிராமங்களில் குடியமர்த்துவதற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அத்தோடு கிழக்கின் உதயம் திட்டத்தினுடாக மேலும் வடமாகாண இளைஞர்களுக்கு புதிய வாழ்வு வழங்கும் பொருட்டு வவுனியாவில் வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக இளைஞர் மத்திய நிலையம் திறப்பு, மெசின், புல்டோசர், டிப்பர், கிரைண்டர் போன்ற 441 இயந்திரங்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. யுத்த சூழல் காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு 7855 வீடுகள் புத்தளம் பகுதியில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் தகவலின்படி 1017181 பேர் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் 78வீதமான தமிழர், 15வீதமான முஸ்லிம், 08 வீதமான சிங்களம் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த தென்மராட்சி பகுதிக்கு மீள் குடியேறியவர்களுக்காக வாழ்வாதார உதவிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளை புனரமைப்பு செய்ய உதவித்தொகையும் வழங்கப்பட்டது. (தினகரன் 11.10.2010)


மேலும் அரசு யுத்தத்தின் பின் UNDP  உதவியுடன் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார வசதிகளை கட்டியெழுப்புவதற்காக பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு தையல் இயந்திரம், கோழி வளர்ப்பு, பலசரக்குக்கடை கிழக்கின் உதயம் திட்டத்தின்மூலம் விவசாய அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மாவிலாறு போன்றவற்றின் அபிவிருத்தி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு மாதத்துக்கான இலவச உலர் உணவு, மொறவெலி, நீலபொல, ரஜஎல நீர்ப்பாசன திட்டங்கள் புனரமைப்பு கிழக்கின் 100 சிறிய குளங்களும் 500 பெரிய குளங்களும் புனரமைப்பு. கிழக்கு மாகாணத்தில் கைவிடப்பட்டிருந்த 3000 ஏக்கர் நிலம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. 4000 குடும்பங்கள் பயனடையும் வகையில் றம்பக்கன் ஓயா திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் 312862 ஏக்கர் கைவிடப்பட்ட நிலங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. வடமாகாண விவசாய நடவடிக்கைக்கு மயாதவெல, இரணைமடு நீர்ப்பாசன திட்டம்.


மேலும் உலக வங்கியின் நிதியுதவியுடன் 6528 நிரந்தர வீடுகளும், மேலும் இராணுவத்தினரின் கட்டுபாட்டில் இருந்த பல பகுதிகள் கன்னிவெடி அகற்றப்பட்டு தற்போது இந்தியாவினால் 5250 வீடுகளும், அரச சார்பற்ற நிறுவனங்கள(நேப்) 2377 வீடுகளும், வியுடெக் 247 வீடுகளும், போரீட் 9 வீடுகளும், முஸ்லிம் பவுண்டேசன் 10 வீடுகளும்; பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைத்துக் கொடுத்துள்ளன.
யாழ்ப்பாணம், தொண்டமானாறு அணைக்கட்டு புணரமைப்பு 1000 மில்லியன் ரூபா நிதியொக்கீட்டின் கீழ் அரசு கல்லோயா நீர்ப்பாசன குளத்தை புணரமைப்பு செய்துள்ளது. மாகாண அமைச்சின் உதவியுடன் மீள் குடியேறிய

மக்களுக்கு விதைநெல். விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மீன்பிடி ஊக்குவிப்பு, கடற்றொழில் அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்பன பாரிய பங்களிப்பினை மீன்பிடி துறைக்கு ஆற்றின. 400 மில்லியன் செலவில் நான்கு இடங்களில் ஆடைத் தொழிற்சாலை உலக வங்கியினால் வடகிழக்கு அபிவிருத்திக்கென 375 கோடி ரூபாவை கடனாக வழங்கியிருந்தது. இதில் 66.7 மில்லியன் சிறு கைத்தொழில் முயற்சி, உல்லாசத்துறை விருத்தி, நிலாவெளி, பாசிக்குடா. அருகம்பை, கடற்கரை அபிவிருத்தி, சுற்றுலா விடுதி, 18 மில்லியன் அமெரிக்க டொலர் உல்லாச பயணத்துறை விருத்தி என்பனவும் குறிப்பிடத்தக்கன.

மேலும் மாங்குளத்தில நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம், தள வைத்தியசாலை, வலயக்கல்வி அலுவலகம், விடுதி, புதுக் குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கான உப அலுவலகம், முல்லைதீவில் 50 பேருக்கு விவசாய உபகரணங்கள், 2000ம் பேருக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன. மேலும் திருக்கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதான வீதிகள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் பாணமையிலிருந்து புல்மோட்டை வரையிலான பாதையும், இறக்கடிப்பாலமும், மட்டக்களப்பு

திருக்கோணமலையிடையே யு15 வீதியில் உள்ள வெருகல், காயங்கேணி, நால்குழி, கங்கை மற்றும் உப்பாறு போன்ற பாலங்கள் 297 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டள்ளது. 59 நீர் வழங்கள் திட்டமும், 12 நீர்த்தாங்கிகளும், 164 புதிய பாடசாலைகளும், 55 வாட்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் 80000 ஏக்கர் வயல் நிலங்கள், 2500 வீட்டுத்தோட்டம், 19 பழக்கிராமங்களும், 3 மாதிரிப்பண்ணைகளும், 50 பால் உற்பத்தி கிராமங்களும், 85000 கட்டாக்காலி மாடுகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தவகையில், வடக்கின் வசந்த் திட்டத்திற்கு இதுவரை 178071 மில்லியன் ரூபா விதி, மின்சாரம், நீர், போக்குவரத்து, உட்கட்டமைப்பு, தபால் துறை, கடற்றொழில் உள்ளிட்ட 15 அபிவிருத்தி திட்டங்களுக்கு இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதில் மின்சாரத்திற்கு மாத்திரம் 11087 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும் இதில் 80வீதமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. 

 யுத்தத்திற்குப் பிந்திய அபிவிருத்தியின் சவால்கள்


• யுத்தத்திற்குப் பின்னர் மக்களை மீள குடியமர்துவதில் பாரிய சிக்கல்களும் சவால்களும் கன்னிவெடி
• அரசு வாழ்வாதார உதவிகளை தொடர்ந்தும் வழங்கும் என பாதிக்கப்பட்ட மக்கள் அரசிலேயே தங்கியுள்ளனர்.
• விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதானது பாரிய சவாலாக உள்ளது.
• மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தீர்ப்பது கடினமான உள்ளது.
• இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்களது உடனடித்தேவையை நிறைவேற்றுவது கடினமாக உள்ளது.

இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தியில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பினை நோக்கும் போது அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பது ஆய்வினை மேற்கொண்டு தகல்களைப் பெற்று மனிதவள அபிவிருத்திக்கான பயிற்சிகளை வழங்கல், நலன்புரி சேவைகள் என்பவற்றோடு புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சமுகத்தின் மரபுகளுடன் இணைந்து உள ரீதியான செயற்பாடுகளை வழங்குதல், சமுகத்திற்கு கூடிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட அமைப்புக்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக அரசசார்பற்ற நிறுவனம் என்பது சமுகத்தினுள் நலிவுற்ற, பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மனிதாபிமான உதவி சேவைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பணியாற்றும் இவ் அரசசார்பற்ற நிறுவனங்களானது போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பினை செய்துள்ளது. இவையானவை

• பிரதேசங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தல்
• அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல்
• தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கல்
• கிராமங்களிடையே சமத்துவமற்ற தன்மைகளை குறைத்தல்
• சமுக மேம்பாட்டுக்கு தடையாக உள்ள காரணிகளை குறைத்தல்
• கிராமங்களை அபிவிருத்தி செய்தல்

போன்ற பல்வேறு நோக்கங்களை கொண்டு

1. சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள்.
2. அரசசார்பற்ற நிறுவனங்கள்.
3. ஐக்கிய நாடுகள் சபை.

மேற்கூறப்பட்ட பிரிவுகளும் பல்வேறுபட்ட பணிகளை செய்து வருகின்றன.

மகிந்தசிந்தனையானது இலங்கையின் அபிவிருத்தியின் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. அந்தவகையில் இதன் அபிவிருத்தி திட்டங்களை நோக்கும்போது தொழிநுட்ப சேவை பாவனையை ஊக்குவித்தல், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஓரம்கட்டப்பட்ட நிலையிலிருந்து கிராமங்களை தொடர்பாடல் இணைப்புக்கள் மூலம் மீட்டல், கிராம

சமுகம், அரச அதிகாரி, தொழில்சார் நிறுவன கல்வியின் இடையேயுள்ள இடைவெளியை குறைத்தல், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு விதாதா கிராமத்திற்கு தொழிநுட்பம், கமின்கமட கிராமத்திலிருந்து கிராமத்துக்கு திட்டம், திரிய பியச 525 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கம்பு புது (கிராமியபுத்தெழுச்சி), கம கவ செத(சேமநலத்திட்டம்), கமநெகும(கிராமிய எழுச்சி) , மேலும் மகநெகும, ரன்தொர திட்டத்தின் கீழ் யாழ்பாண நீர்விநியோகத்திட்டம் குறிப்பிடத்தக்கது. திவிநெகும, கம இசுறு, வென்தாக, ஜாதிகசவிய, கிரிகம்மான என்பன குறிப்பிடத்தக்கன.
யுத்தத்திற்குப்பின்னரான இலங்கையில் பொருளாதாரவளர்ச்சியானது 7மூ க்கும் மேற்பட்ட வளர்ச்சியினைக் கண்டுள்ளமையினையும், சுற்றுலாத்துறையில் வளர்ச்சிகண்டுள்ளமையினையும அவதானிக்கலாம்.

எனவே இத்தகைய நிலையில் தொடர்ந்து அபிவிருத்தியடைந்துவரும் நாடாக காணப்படும் இலங்கையின் அரசாங்கமானது மேற்கூறப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டாலும் அது பல்வேறுபட்ட விமர்சனங்களை எதிர்நோக்கியும் வருகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையாகவும் உள்ளதோடு, வட மாகாணத்தில் திட்டமிட்ட நிலச்சுவிகரிப்பும், குடியேற்றமும் இடம்பெற்று வருவதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. எனினும் இவற்றை கருத்திலெடுக்காமல் அரசாங்கமானது பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம், சரணடைந்த

புலிகளின் புனர்வாழ்வு, தொழில் வாய்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்றவற்றோடு ஏனைய அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதோடு முழு நாட்டையும் சிறந்த

அபிவிருத்தி திட்டங்களை கொண்டு அபிவிருத்தி செய்யுமாக இருந்தால் ஆசியாவின் மத்தியில் என்ன உலக நாடுகளின்; மத்தியிலும் இலங்கையானது கேந்திர நிலையமாகவும், சொர்க்கமாகவும், ஆச்சரியமாகவும்,

காணப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

1. மூக்கையா.மா.செ,1995, 'அபிவிருத்தி கல்விக்கு ஓர் அறிமுகம்', பேராதனை பல்கலைக்கழகம்,இலங்கை.
2.இரயாகரன்.பி,2002, 'இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்'
http//www.tamilmirror.lk.2010.07.14
http//www.google.lk/search?/q=fpof;fpd;/20cjak;qht=ta… http//www.google.lk/search?/q=post+war+development+in+srilanka/um…
http//Sunday times.lk/100103/business times /bt 22.html….
http//www.southasiaanalysis.org./%5cc papers 33% scpaper 3299html…
http//www.aabc.col in /…388-inclusive-growth-key-to srilanka-post war..

அசோக்குமார்.கே, கருணாநிதி.வி.சு,(2008.11.07) 'வடபகுதியை மீளகட்டியெழுப்ப வடக்கின் வசந்தம்

No comments:

Post a Comment