Pages

Nov 19, 2013

கிழக்கின் முக வெத்திலை, கிழக்கிலங்கையின் கேந்திர நிலையம்- கல்முனை

-எமது அட்மின்-
சோழன் இராசேந்திரன் (1017-1044) அநுராதபுர இராசதானியைக் கைப்பற்றி ஆண்ட காலம் 11 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இவ்வூர் பிரசித்தி பெற்றுள்ளது என்பதை வரலாறு ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கல்முனை(க்குடி) கிராமத்தின் அசல் பெயர் கரவாகு என்பதாகும். இதற்கு குடியிருப்பு, கன்முனை, கைனை என்றும் பெயர் உண்டு. உள்ளுராட்சி விடயத்தில் இக் கிராமம் கல்முனை என்றே அழைக்கப்படுகின்றது. கரவாகு என்னும் பெயர் பண்டு தொட்டு இருந்து வருகின்றது. காரணம் கரவாகுப் பற்று எனும் நிர்வாகப் பிரதேசம் இன்றும் இங்கு இருந்து வருவதாகும். 

கடந்த நூற்றாண்டுகளில் எமது முன்னோர்களின் வழிகாட்டுதலில் கிழக்கிலங்கையின் கேந்திர நிலையம், தென் கிழக்கலகின் தலை நகரம். இலங்கையின் ஆளுமை மிக்க அரசியல் தலைமைகளை உருவாக்கிய தாய்வீடு. ,கடலும் வயலும் சார்ந்த நில வனப்புகளை கொண்ட பிரதேசம். முஸ்லிம் அறிவியலின் பூர்வீகம். ஒற்றுமையின் இருப்பிடம் தொழில் வாய்ப்புகளின் சொர்க்காபுரி இப்படிப்பட்ட பல்வேறு அடைமொழிகளை ஒருமித்து தன்னகத்தே கொண்டு இந்நாட்டில் காணப்படும் ஒரேயொரு பிரதேசம் கல்முனையாகும்.

இவ்வூரானது முழு இலங்கை முஸ்லிம்களின் பலமாகவும் அரசியல் ரீதியில் முஸ்லிம்களின் அடிநாதமாகவும் காணப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் பலம் என்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பலமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பலம் என்பது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பலமாகும். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பலம் என்பது கல்முனைத் தொகுதி முஸ்லிம்களின் பலமாகும். கல்முனைத் தொகுதி முஸ்லிம்களின் பலம் என்பது கல்முனை வாழ் முஸ்லிம்களின் ஒற்றுமையினால் வெளிக்கொணரப்படுகி்ன்ற பலமாகும். சுருங்கக் கூறினால் முழு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தின் அடிநாதம் இவ் ஊரின் ஒற்றுமை என்கின்ற பலத்திலிருந்தே புறப்படுகின்றது.

இலங்கையின் முதன் முதலாக முஸ்லிம்களுக்கென முஸ்லிம்களின் தனி ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட முதலாவது மாநகர சபை கல்முனை மாநகர சபையாகும். அன்று முதல் இன்றுவரை இம்மாநகர சபையின் மிகவும் முக்கியத்துவமிக்க பிரதேசமாக காணப்படும் கல்முனை இற்றை வரை இம்மாநகர சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக கல்முனை இருந்து வருகின்றது.

கல்முனை மாநகர சபையானது கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகம், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் என மூன்று பெரும் பிரதேச செயலகங்களை கொண்டு இயங்குகின்றது.

No comments:

Post a Comment