பெரும்பாலனோர் அற்புதம் என்பதனை நம்புவது குறைவு. இம்முறை ஹஜ் யாத்திரையில் ஒரு அற்புதம் நடந்துள்ளது. வயதான சூடானனை சேர்ந்த 7 வருடங்களுக்கு முன் கண்பார்வையை இழந்த இவர் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு வந்து சில நாட்களிலேயே சூடானை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு திடீர் என கண்பார்வை கிடைத்துள்ளது.
இவ்வாறு அற்புதமான முறையில் கண்பார்வையை பெற்ற பாதிமா அல் மல்ஹி தெரிவிக்கையில் நான் பல சத்திரசிகிச்சையில் செய்த போதும் அவை ஏதுமே எனக்கு கண்பார்வையை பெற்றுத் தரவில்லை ஆனாலும் எனக்கு கண்பார்வை கிடைக்குமென்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன் புனித ஹஜ் கடமைக்கு சென்றால் நிச்சயம் எனக்கு பார்வை வரும் என்று தெரிவித்ததாக emiraate 247 தளம் தெரிவிக்கிறது.
மேலும் அவர் தெரிவிக்கையில் சில நாட்கள் நான் ஹரமில் தங்கியிருந்தேன் அந்த வேளைகளில் எனக்கு கண்பார்வையை பெற்றுத் தருமாறு தொடர்ந்து கெஞ்சி கையேந்தி துஆ கேட்டேன். அப்படி துஆ கேட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீர் என என் கண்களை மூடி இருந்த இருள் நீங்கியது கண்பார்வை வந்தது. எனக்கு என்ன நடந்தது என்று என்னால் நம்பவே முடியவில்லை.
7 வருடங்களின் பின் என் மகனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. யாரின் உதவியும் இன்றி யாரையும் தொந்தரவு செய்யாமல் இப்போது என்னால் என் கடமைகளை செய்யலாம் என மிகவும் மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment