.jpg)
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த வியத்தகு யோசனைகள் அடங்கிய ஆவணம் இம்முறை ஞாயிறு மவ்பிம பத்திரிகையின் “கெபினட் 01” என்ற தலைப்பில் அரசியற் பகுதியில் வெளியாகியுள்ளதாக ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஞாயிறு மவ்பிம பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, ஐக்கிய பிக்குகள் முன்னணி முன்வைத்துள்ள 8 யோசனைகளுக்கு ஈடாகவே, ரணில் விக்கிரமசிங்க 19 விடயங்கள் அடங்கிய ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார்.
இந்த யோசனைகளுக்கு அமைய, உத்தேச தலைமைத்துவ குழுவினால் தொகுதி அமைப்பாளர்கள் நியமனம், வேட்புமனு சபையை நியமித்தல் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்யும்போது முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில், கட்சியின் தலைவருடன் ஆராய்ந்தன் பின்னரே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, தலைமைத்துவ குழுவின் யோசனைகள் செயற்குழுவிற்கு காலத்திற்கு காலம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்ற யோசனையும் இதில் அடங்குவதாக மவ்பிம பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக்குகள் முன்னணி சமர்ப்பித்துள்ள யோசனைகளுக்கு அமைய, தலைமைத்துவ குழு நியமிக்கப்பட வேண்டுமெனவும், ரணில் விக்கிரமசிங்கவின் அந்த யோசனைகளுக்கான பதில் தேரர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேரர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அந்த 19 யோசனைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment