Pages

Sep 4, 2013

அட்டாளைச்சேனையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற் பயிற்சி நிலையம்

அட்டாளைச்சேனையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற் பயிற்சி நிலையம்

கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக இயங்கிவரும் தனியார் தொழிற் பயிற்சி நிலையம் தற்போது அட்...டாளைச்சேனை பிரதான வீதியில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்பாக இயங்கி வருகின்றது.

ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் நவீன தங்குமிட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் எந்த இடத்திற்கும் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

இப்பயிற்சி நிலையத்தினூடாக, கிழக்கு மாகாணத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலை வாய்ப்புபெற்றுச் செல்லும் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் இலகுவான சுலபமான வழிகளில் பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அட்டாளைச்சேனை செய்து கொடுக்கப்படுகின்றது.

பயிற்சிகள் முடிந்தவுடன் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் வைத்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பயிற்சி நிலையத்தின் அலுவலகமானது, அட்டாளைச்சேனை – 04, பிரதான வீதியில் (ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்பாக) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment