வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிளிநொச்சி ரயில் நிலையத்தைத் திறந்து வைத்து கிளிநொச்சி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மேற்படி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, குமார வெல்கம உட்பட அமைச்சர்கள் ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாம் அனைவரும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் இணைந்தே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். சிலரது செயற்பாடுகள் பிரிவினைக்கே வழிகோலுகின்றன. இன்னும் சிலர் இந்த நாட்டை இன்னொரு நாட்டோடு இணைத்து செயற்பட விரும்புகின்றனர். இதற்கு நாம் இடமளிக்க முடியாது.
ஒரே நாட்டின் சகோதர இனத்தவர்கள் நாம். நாம் கைகோர்த்துச் செயற்பட வேண்டுமென்பதே எமது விருப்பம்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, பல ஆண்டுகளுக்குப் பின் கிளிநொச்சிக்கு ரயிலில் வரக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 23 ஆண்டு காலமாக இப்பிரதேசத்துக்கு ரயில் சேவை இருக்கவில்லை. சுமார் மூன்று தசாப்தங்கள் இப்பகுதி அபிவிருத்தியில் பின்தங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.
எனினும் முப்பது வருட அழிவுகளை குறுகிய நான்கு வருட காலங்களில் மீள கட்டியெழுப்புவதற்கு நாம் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். படிப்படியாக மீண்டும் அவற்றைப் பெற்றுக் கொடுக்க எம்மால் முடிந்துள்ளது.
இயல்பு வாழ்வைத் தோற்றுவித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் அவர்களின் வாழ்வாதாரத்தை முன் னேற்றமே நாம் இத்தகைய அபிவிருத் திகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
யுத்தத்தில் அங்க வீனர்களாகியுள்ளோரின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கவும் நாம் நடவடிக்கை எடுப்போம். உயிர்களை எம்மால் மீளப் பெற்றுக் கொடுக்க முடியாது. எனினும் இழந்த சகலதையும் குறிப்பாக தென்பகுதி மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற அத்தனை நன்மைகளையும் நாம் வடக்கு மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதே எமது கொள்கையாகும்.
நான் ரயிலில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தபோது, எமது கிராம மக்கள் தமது கிராமத்திற்கு ரயில் சேவையை வழங்காமல் கிளிநொச்சிக்கு முந்திக்கொண்டு வழங்குவதாக என்னிடம் குறிப்பிட்டனர்.
வடக்கு மக்கள் ஒன்றை உணர வேண்டும். நாம் எமது கிராமத்திற்கு முன்பதாக வடக்கிற்கு ரயில் சேவையை யும் அபிவிருத்தியையும் கொண்டு வந்துள்ளேன்.
No comments:
Post a Comment