பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திரித்துப் பேசியதற்கு அமைச்சர் எ.எச்.எம்.பௌசி கவலையினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அமைச்சர் எ.எச்.எம்.பௌசி தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை. அவர்களுக்கு ஏனைய தீவிரவாத குழுக்களோடு எந்த தொடர்பும் இல்லை.
முஸ்லிம் சமூகம் தலிபான் தீவிரவாதக் குழுக்களுடனோ அல்லது அல்- குவைதா குழுவோடு எந்தவித தொடர்பிலும் இல்லை என பௌசி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் பாதுகாப்புடனும் சமாதானத்துடனும் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்ததை அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment