சீனாவின் பிரதிப் பிரதமரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியஸ்தர்கள் சபையின் அங்கத்தவருமான லியூ யுங்ஷான் இன்று (10) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.
கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்தபோது செய்துகொண்ட இருதரப்பு உடன்படிக்கைகளை அமுல்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கிலேயே தனது விஜயம் அமைந்துள்ளதாக சீனாவின் பிரதிப் பிரதமர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் தகவல் ஊடகத்துறை அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல- நிமல் சிறிபால டி சில்வா -லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment