Pages

Sep 1, 2013

பாலியல் குற்றச்சாட்டில் இந்திய ஆன்மீகத் தலைவர் கைது

இந்தியாவில் செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர் ஒருவர், 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில், அவரது பலத்த பாதுகாப்புடனான ஆச்சிரமத்தில் வைத்து, 72 வயதான, அஸரம் பாபு என்ற அந்தச் சாமியார் கைது செய்யப்பட்டார்.

தான் மிகவும் சுகயீனமுற்றிருப்பதாகக் கூறி, தான் கைது செய்யப்படுவதை அவர், தவிர்த்து வந்தார்.

சமூகத்தில் காமம் அதிகரித்து வருவதாகக் கூறி, அதற்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்த அவரைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் நிறைய இருக்கிறார்கள்.

இவர் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்று பாஜகவின் மூத்த உறுப்பினர்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment