இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் இன்று புதன்கிழமை காலை மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம்;முடிவுக்கு வந்துள்ளதாக காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக டிப்போ ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
3 மாதச் சம்பள நிலுவையை வழங்குமாறு கோரி இரண்டாவது தடவையாக எங்களுடைய பஸ் டிப்போ ஊழியர்கள் இன்று மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் நஸீர் தலைமையில் காத்தான்குடி பஸ் டிப்போவில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க மற்றும் கோயில்குளம் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி சமன் பெரயரா, மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ரவூப் ஏ மஜீட், காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளர் றஹீம், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய உயரதிகாரிகள் முன்னிலையில் ஒரு கூட்டம் இடம்பெற்றதாகவும் அதில் கருத்து தெரிவித்த இ.போ.ச கிழக்குப் பிராந்திய முகாமையாளர் நஸீர் தற்போது ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாதச் சம்பள நிலுவையில் 1 ஒரு மாத சம்பள நிலுவையை இன்று காத்தான்குடி பஸ் டிப்போவில் பெற்றுக்கொள்ள ஆவண செய்ளப்பட்டுள்ளது.
அடுத்து அங்கு வருகைதந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க அடுத்த இரண்டு மாதச் சம்பள நிலுவை ஏதிர்வரும் 17 திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை காரியாலயம் மூலம் பெற்றுத்தருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் தெரிவித்தார்.
இதையடுத்து குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததோடு ஸ்தம்மிதம் அடைந்த காத்தான்குடி பஸ் டிப்போவின் போக்குவரத்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின.
தற்போது காத்தான்குடி பஸ் டிப்போவினால் டிப்போ ஊழியர்களுக்கு 1 ஒரு மாத சம்பள நிலுவை வழங்கப்பட்டுவருவதாக டிப்போ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment