Pages

Sep 3, 2013

துனீஷிய அரசை கவிழ்க்க தமரோத் பிரசாரம் ஆரம்பம்

எகிப்தில் இராணுவ சதிப்புரட்சிக்கு காரணமாக இருந்த தமரோத் பிரசார அமைப்பை பின்பற்றி துனீஷியாவின் இஸ்லாமியவாத அரசுக்கு எதிராகவும் அங்கு கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

துனீஷிய அரசு எதிர்த்தரப்பினரை ஒன்றிணைத்த தேசிய அளவிலான பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுப்பதில் தோல்வி கண்டிருப்பதாக மேற்படி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலை யில் அரசுக்கு எதிராக 1.7 மில்லியன் கை யெழுத்துகள் இதுவரையில் சேகரிக்கப்பட் டிருப்பதாக குறித்த அமைப்பின் நிறுவனர் மொஹமட் பெனூர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசை கலைப்பதற்கு தமரோத் அமைப்பு தமக்கு தூண்டுதலாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்தில் ஜனாதிபதி மொஹமட் முரிசி அரசுக்கு எதிராக 22 மில்லியன் கையெழுத்துகளை சேகரித்ததாக கூறி அரசுக்கு எதிராக கடந்த ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை காரணம் காட்டியே எகிப்து இராணுவம் ஜுலை மூன்றாம் திகதி மொஹமட் முர்சியை பதவி கவிழ்த்தது.

No comments:

Post a Comment