Pages

Sep 2, 2013

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற முதல் தேர்தல் வன்முறைச் சம்பவம்

வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரியந்த அசோக்கவின் ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியில் இடம்பெற்றது.

புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியில் நேற்றிரவு தேர்தல் பிரச்சார போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த செனவிரத்ன சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற முதல் தேர்தல் வன்முறைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment