தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது ஜொஹனஸ்பேர்க்கிலுள்ள வீட்டிற்கு அவர் சென்றுள்ளார்.
நுரையீரல் தொற்றுக் காரணமாக பிரிட்டோரியாவிலுள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில் வெளியேறியதாக முதலில் தெரிவிக்கப்பட்ட செய்தி உண்மைக்கு புறப்பானது என தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.
கடந்த ஜுன் மாதம் 8 ஆம் திகதி நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment