Pages

Sep 18, 2013

சோகத்தில் முடிந்த இளைஞரின் சாதனை (VIDEO)

பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையிலிருந்து குதித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க நாட்டை சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் 2,500 மீற்றர் உயரத்திலிருந்து குதித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சாதனைக்கான பயிற்சியின் போது இவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஆனால் இந்த நபரின் பெயர் மற்றும் எவ்வாறு விபத்து நடந்தது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விடயம் பயிற்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த பகுதியானது ஆபத்தான இடமாகும்.
மேலும் முறையான பயின்சியின்மை மற்றும் வீரர்கள் சாதனையில் ஈடுபடுவதற்கு முன்னதாக இதனை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஈடுபடுவதனால் இவ்விபத்து ஏற்படுகின்றது என கூறியுள்ளனர்.

இதுவரை இந்த ஆல்ப்ஸ் மலையில் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதத்தில் கூட ஒரு நபர் சாதனையில் ஈடுபட்ட போது மலையில் மோதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment