Pages

Aug 16, 2013

தொடர்ந்தும் எட்டாவது நாளாக ஊரடங்கு‍ச் சட்டம்

ஜம்மு காஷ்மீர் பகுதியின் கிஷ்ட்வாரில் தொடர்ந்தும் எட்டாவது நாளாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தாக்குதலில் ஈடுபட்டதால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார்கில் பகுதியிலுள்ள ட்ராஸ் மற்றும் காக்சார் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரிலுள்ள இந்திய எல்லையில் கடந்த 10 நாட்களாக பாகிஸ்தான் படையினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் இந்தியா தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றது.

கடந்த 6 ஆம் திகதி பூஞ்ச் பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment