Pages

Aug 15, 2013

கிராண்ட்பாஸ் விவகாரம் பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் ரிஷாத் கடிதம்

கிராண்ட்பாஸ் பள்­ளி­வா­சலும் வீடு­களும் தாக்­கு­தலுக்­குள்­ளான போது பொலிஸார் அதனைத் தடுக்­காது இருந்­துள்ளனர். அதற்கான அத்­தாட்­சி­களை பொலிஸ் மா அதி­ப­ருக்கு இன்று அனுப்பி வைக்கவுள்ள வர்த்­தக மற்றும் கைத்­தொழில் அமைச்­சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், சம்­பந்­தப்­பட்ட பொலி­ஸா­ருக்கு எதி­ராக எடுக்­கப்­ப­ட­வுள்ள தீர்க்­க­மான நட­வ­டிக்­கை­களை நாட்டு மக்கள் எதிர்­பார்த்­தி­ருக்­கி­றார்கள் என்று தெரி­வித்­துள்ளார்.
அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் இன்று பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்கவுள்ள கடி­தத்­திலே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். கடி­தத்­துடன் சம்­பவம் இடம்­பெற்ற போது பொலிஸார் செயற்­ப­டாது வெறு­மனே இருந்­த­மைக்கு அத்­தாட்­சி­யாக டிவிடி மற்றும் சிசி­டிவி பதி­வு­க­ளையும் அனுப்பி வைத்­துள்ளார்.

அமைச்சர் குறிப்பிட்ட கடிதத்தில் மேலம் தெரி­வித்துள்­ள­தா­வது;-


கடந்த 11ஆம் திகதி புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சில் அமைச்­சர்கள் தினேஷ் குண­வர்த்­தன மற்றும் ஏ.எச். எம். பெளஸி தலைமை தாங்­கிய கூட்­டத்தில் குறிப்­பிட்ட தாக்­குதல் இடம் பெற்ற போது பொலிஸார் தாக்­கு­தல்­களைத் தடுக்­காது செய­லற்­றி­­ருந்­தமை தொடர்­பாக நான் தெரி­வித்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆத­ர­வாக இந்த அத்­தாட்­சி­களை அனுப்பி வைக்­கிறேன்.

குறிப்­பிட்ட பகு­தியைச் சேர்ந்த சில குடி­யி­ருப்­பா­ளர்கள் இந்த பொலி­ஸா­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு நேரடி சாட்­சி­க­ளாக இருக்­கி­றார்கள் . பொலிஸார் தாக்­கு­தல்­களைத் தவிர்க்­காமை அவர்கள் தாக்­கு­தல்­க­ளுக்கு உத­வி­ய­தாக முஸ்­லிம்கள் கரு­து­கி­றார்கள்.

பாரா­ளு­மன்­றத்தின் பிர­தி­நிதி என்ற வகையில் இந்த பொலி­ஸா­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் பார­தூ­ர­மான விட­ய­மாக நான் இதனைக் கரு­து­கின்றேன்.

இலங்கை பொலிஸார் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான சம்­ப­வங்­களில் பாரா­பட்­ச­மற்ற முறையில் தங்­க­ளது கட­மை­களைச் செய்­ய­வில்லை என்­பது இது முத­லா­வது முறைப்­பா­டல்ல. பொலிஸார் தமது கட­மை­களைச் சரி­யாகச் செய்­யாமை தாக்­கு­தல்­க­ளுக்கு உர­மூட்­டு­வ­தாக அமையும். அத்­தோடு நாட்டில் முறுகல் நிலையை உரு­வாக்க எண்­ணி­யுள்­ளோரை ஊக்­கு­விப்­ப­தா­கவும் அமையும் இது நாட்டின் வர­லாற்­றுக்கு நிரந்­தர களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­விடும்.


அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் என்ற வகையில் இவை தவிர்க்­கப்­பட வேண்டும் என்­பதே எனது விருப்­ப­மாகும். இது தொடர்பில் உட­ன­டி­யாக நீங்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பிப்­பீர்கள் என்று நம்­பு­கிறேன்.

கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் மற்றும் வீடுகள் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­ன­போது அச்­சம்­ப­வத்தை தடுத்து நிறுத்­தாத அவ்­வி­டத்தில் கட­மையில் இருந்த பொலிஸார் மற்றும் அதி­கா­ரிகள் தொடர்பில் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை ஆரம்­பி­யுங்கள். மேல­திக விப­ரங்கள் தேவைப்­படின் என்னை அல்­லது எனது செய­லா­ளரைத் தொடர்பு கொள்­ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்ட தாக்குதல் சம்பவத்தை தடுக்காது பொலிஸார் செயலற்று இருந்தமையை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் பொலிஸ் மா அதிபரை பதவி விலகும் படியும் கோரியிருந்தார்.

Tags : கிராண்ட்பாஸ் பள்­ளி­வா­சல் தாக்குதல், ரிஷாத் பதி­யுதீன், பொலிஸ் மா அதி­பர்  (VV)

No comments:

Post a Comment