Pages

Aug 16, 2013

சாகச நிகழ்ச்சியின் போது வீரர் உயிரிழந்த பரிதாபம் (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

சுவிட்சர்லாந்தில் நடந்த சாகச நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய இங்கிலாந்து வீரர் பரிதாபமாக மரணமடைந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த மார்க் சட்டன், கடந்தாண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் ஆக்ஷன் காட்சிகளை தத்ரூபமாக செய்து மக்களை கவர்ந்தார்.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார்.

இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளை படம்பிடித்து ஒளிபரப்பும் எபிக் டிவி தொலைக்காட்சி, 20 சாகச வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து குதிக்கும் சாகச காட்சியை சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலை உச்சியில் கடந்த 14ம் திகதி படம் பிடித்தது.

இதற்காக 3 ஆயிரத்து 300 மீற்றர் உயரத்தில் இருந்து கீழே குதித்த மார்க் சட்டன், நிலை தடுமாறி மலை விளிம்பின் மீது விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த மார்க் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

(வீடியோ பார்க்க )

(YM)

No comments:

Post a Comment