கிராண்ட்பாஸ் தற்போதைய நிலவரத்தின் படி ஓரளவு அமைதியான சூழ்நிலை தென்பட்டாலும் என்ன நடக்கும் என்று தெரியாது மக்கள் குழப்பமடைந்த நிலையிலே உள்ளனர்.
அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த போலீசார் அவர்கள் கடமையை செய்திருந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் அவர்கள் வேண்டுமென்றே சும்மா இருந்ததாகவும், சிலர் பெயருக்கு விலக்குவது போல விலக்கியதாகவும் சொன்னார். மாலை நேரத்தில் இளைஞர்களில் அநேகர் பெருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.
தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் சிங்களவர்களும் முக்கிய பங்கு வகிப்பதால் நிலைமை சீராகுவதில் குழப்பம் உள்ளது. வெளிச் சிங்களவர்கள் பின் பகுதியாலேயே (சிங்கள மக்கள் செறிவாக வாழும் பிரதேசம்) வந்திருக்கக் கூடும் என ஊகம் தெரிவிக்கப்பட்ட நிலையில், தாக்க வந்த கும்பலில் ஒரு பகுதி இன்னும் பன்சலைக்குள் ஒளிந்து கொண்டு இருப்பதாக இளைஞர்கள் நம்புகின்றனர்.
வந்தால் தங்களைக் காத்துக்கொள்ளும் ஏற்பாட்டில் விழித்தவண்ணம் முஸ்லிம் இளைஞர்கள் நடமாடுகின்றனர். விஷேட அதிரடிப் படையினர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை சூட்சுமமான முறையில் கலைத்து வருகின்றனர். ஊரடங்கு அமுலில் இருந்தாலும் 12:30 (11-08-2013) அங்கிருந்து வரும்வரை அதற்கு அடுத்த வீதி "அவ்வல் ஸாவியா"வில் இளைஞர்கள் நிறைந்து காணப்பட்டனர். தற்பொழுது கிடைக்கப்பெற்ற தகவலின் படி அனேகமானவர்களை அதிரடிப்படையினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டதகத் தெரிய வருகிறது.
இந்த ஆட்கலைப்பும், ஊரடங்கும் அமைதிக்காகவா அல்லது எஞ்சியவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவா என்று தெரியவில்லை. ஆனால் நமது இளைஞர்கள் சற்று நிதானித்துச் செயற்படுவது நன்று. இல்லாவிடில் மீடியாக்கள் கதையைத் திருப்பி விடுவார்கள். அத்துமீறி பள்ளிவாயலையும், வீடுகளையும் உடைத்துள்ள நிலையில், குறிப்பிட்டுக் கூறக்கூடிய எந்த இருதரப்பு மோதல்கல் நடக்காமல் மீடியாக்கள் கோஷ்டி மோதல் என பொய் கூறியுள்ள நிலையில், நம்மவர்கள் ஆத்திரத்தில் ஏதாவது செய்துவிட்டால் கதையை முற்றாக மாற்றி விடுவார்கள். எனவே இளைஞர்கள் தற்காப்புக்காக நின்றாலும் அமைதி காப்பது சாலச் சிறந்தது.
போலீசார் நாளைக்குள் பள்ளிவாயல் தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்வதாக வாக்களித்துள்ளனர். அதேவேளை 11-08-2013 காலை நிலைமையை சீராக்கித் தருவதாக அதிரடிப் படையினர் இளைஞர்களிடம் வாக்களித்தனர். மேலும் நாளை 7 மணியளவில் பள்ளிவாயலை ஒப்படைப்பதாகவும், பயப்படத் தேவையில்லை எனவும் வாக்களித்தனர்.
ஒரு இளைஞர் கருத்துத் தெரிவிக்கையில்,

No comments:
Post a Comment