கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்கள் ஐவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுத் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் கட்சி தனித்துப் போட்டியிடுவதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தம்மை இணைத்துக் கொண்டவர்களே இவ்வாறு உறுப்புரிமை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தவகையில், ஏ.எல். இல்ஹாம், எஸ்.எச்.ஏ. கரீம், எஸ்.கே.எஸ். முதாஜித், எம்.எச்.எம். நஜாத் மற்றும் எஸ்.ஏ. யஹ்யா ஆகியோரே உறுப்புரிமை பறிக்கப்பட்டவர்களாவர். கட்சித் தலைவருக்குள்ள அதிகாரத்தைப் பிரயோகித்தே இவர்களின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சிங்கள பத்திரிகையொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. (மு)

No comments:
Post a Comment