இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட துண்டுப் பிரசுரங்களை கண்டி நகரில் விநியோகித்துக்கொண்டிருந்ததாக கூறப்படும் அரேபிய நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி நகரில் பொதுமக்கள் மத்தியில் மேற்படி துண்டு பிரசுரம் விநியோகிக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அரேபியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தாம் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக ஒப்புக்கொண்டதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment