பாகிஸ்தான், அஃப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ஆளில்லா போர் விமானங்கள் மூலம் அமெரிக்க ராணுவம் அவ்வப்போது தாக்கி அழித்து வருகிறது.
இதுபோன்ற ஆளில்லா விமானங்கள் தரைத்தளத்திலிருந்துதான் இதுவரை இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடலில் செல்லும் விமானம் தாங்கி கப்பல் மேல்தளத்திலிருந்து ஆளில்லா போர் விமானம் ஒன்றை முதன்முறையாக, அமெரிக்க கடற்படை இயக்கியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து, “சால்ட்டி டாக் 502″ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ள எக்ஸ் 478 ரக ஆளில்லா போர் விமானம் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக கீழே இறக்கப்பட்டது.
3,200 கிலோ மீட்டர் தொலைவு வரை பறக்கக் கூடிய இந்த எக்ஸ் 478 ரக ஆளில்லா போர் விமானம், ரேடார் கண்காணிப்பில் சிக்காமல் ரகசியமாகச் சென்று குண்டுகளை வீசி தாக்கும் திறன் கொண்டதாகும். இந்த வீடியோ உங்களை ஆச்சர்யப்படுத்தும்…
No comments:
Post a Comment