Pages

Jul 13, 2013

சவுதியில் மர்ம தொற்று நோய் பரவி வருகிறது - ஹஜ் மேற்கொள்ள வருபவர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வுதியில் மர்ம தொற்று நோய் பரவி வருவதால், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வருபவர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸ் கிருமி தொற்று நோய்க்கு சுமார் 800 பேர் பலியாகினர்.

இந்நோயின் முதல்கட்ட அறிகுறியாக லேசான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும்.

பின்னர், இடைவிடாத காய்ச்சலாக மாறி சில நாட்களுக்குள் நோயாளி மரணம் அடைய நேரிடும்.

தற்போது சவுதி அரேபியாவில் சார்ஸ் கிருமி தொற்றினால் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்நோயால் 38 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வருபவர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் பெருமக்கள் ஹஜ் என்னும் புனித யாத்திரையை மேற்கொண்டு சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வந்து அங்குள்ள காபா என்னும் புனித இடத்தின் முன் தொழுகை நடத்துவார்கள்.

அங்கிருந்து மதினாவிற்கு செல்வார்கள். வருகிற அக்டோபர் மாதம் ஹஜ் யாத்திரைக்கு லட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டமான இடங்களுக்கு வரும் மக்களை இந்த நோய்த்தொற்று தாக்காதிருக்கும் வண்ணம், முகத்திரை அணிந்து கொள்ளும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் நீண்டகாலம் நோயினால் அவதிப்பட்டவர்கள் தங்களுடைய பயணத்தைத் தள்ளிப்போடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டும், இருமினாலோ தும்மினாலோ மறைத்துக் கொண்டும், தனிப்பட்ட முறையிலும் தங்களுடைய சுகாதாரத்தை காத்துக் கொள்ளும்படியும் அரசு யாத்ரிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment