அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பூரண ஆதரவுடன் இலங்கையில் புதிய பல்கலைக்கழகம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் திறந்து வைக்க சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் வறிய மாணவர் நலன் கருதி அவர்களுக்குப் பூரண வசதிகளையும் வழங்கி இலங்கையில் கல்விமயப்படுத்தும் தூர நோக்குடன் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக ஐம்பது மில்லியன் செலவில் காத்தான்குடியில் தற்காலிக கட்டிடம் அமைத்து முடிக்கப்பட்டதுடன் மிக விரைவில் திறந்து வைக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கான புதிய கட்டிடம் கிழக்கு மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதோடு இதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படவுள்ளது. தேசிய ரீதியில் இயங்க இருக்கும் இப்பல்கலைக்கழகம் விரைவில் சர்வதேச பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சவூதி உயர் அதிகாரிகள் குழு சகிதம் பிரதியமைச்சர் குழு நேரில் சென்று பார்வையிட்டது. இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரசியின் சட்ட ஆலோசகர் அஸீஸ் பின் யஹ்யா, டாக்டர் ஐமன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி, நகர தவிசாளர் அஸ்பர் ஆகியோரும் கலந்தகொண்டனர்.

No comments:
Post a Comment