Pages

Jun 11, 2013

அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரத்தின் அருகாமையில் பெயர் பலகை இல்லாமையால் மக்கள் சிக்கல்.

(நதீர் ஹிஸாம்)

அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரத்தின் அருகாமையில் வீதிகளை சுட்டிக்காட்டும் பெயர் பலகை இல்லாமையால் மக்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் தான் செல்ல வேண்டிய வீதி தெரியாமல் தடுமாறுவதால் விபத்தும் ஏற்படுகின்றது.


முக்கியமான நகரங்களுக்கு செல்லும் கேந்திரமான கல்முனை, பொத்துவில், அம்பாறை ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகாமையில் பெயர் பலகை ஒன்றை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அல்லது அக்கரைப்பற்று மாநகர சபை உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment