அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு!(படங்கள்)

வியாபார நிலையங்கள் முற்றாக மூடப்பட்டு வீதிகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றது. இங்குள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தும் மாணவர்கள் மிக மிகக் குறைவாகவே சமூகமளித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இராணுவம் இப்பிரதேசத்தில் நேற்று இரவு தொடக்கம் குவிக்கப்பட்டு பிரதான வீதியில் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்ல வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் இராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment