மணப் பெண் இல்லாத திருமணத்தைப் போன்றது இம்முறை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1973ம் ஆண்டு முதல் இதுவரையில் நடைபெற்ற அமர்வுகளில் பிரித்தானிய மஹாராணி பங்கேற்காமல் இருந்ததில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஓர் பின்னணியில் இம்முறை அமர்வுகளில் பிரித்தானிய மஹாராணி பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக இளவரசர் சாள்ஸ் பங்கேற்பார் எனவும் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய மஹாராணி அமர்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகிருந்ததாகவும் அதன் போது அந்தக் கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்திருந்ததாகவும் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டிள்ளார்.
அசாத் சாலி கைது செய்யப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். தங்காலை, கஹாவத்தை, அக்குரஸ்ஸ போன்ற இடங்களில் படுகொலை செய்த குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment