Pages

May 9, 2013

அரசாங்கத்தின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் : றுவான் விஜயவர்தன


அரசு கூறும் பொய்வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்த இளம் சந்ததியினர் தற்போது வெளிநாடுகளுக்கு சென்று தொழில்புரிந்து தமது வாழ்க்கையை முன்னெடுக்க யோசிக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றுவான் விஜயவர்தன தெரிவித்தார்.
ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
இளம் சந்ததியினர் அரசின் பொய்வாக்குறுதிகளையும் ஏமாற்று வார்த்தைகளையும் நம்பி ஏமாற்றம் அடைந்த நிலையில் அவுஸ்திரேலியா, இத்தாலி மற்றும் கொரியா போன்ற நாடுகளுக்கு சென்று தொழில்புரிய ஆர்வம் காட்டுகின்றனர்.
'தருண்யட்ட ஹெட்டக்" போன்ற திட்டங்களை ஆரம்பித்து ஏமாற்றும் அரசிடம் இளைஞர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர, கொழும்பு மற்றும் ஊவா ஆகிய பல்கலைக் கழகங்களில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் தம்மை ஹிட்லர் போன்று நடத்துவதாக மாணவர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர். இதற்கு அரசாங்கம் உரிய தீர்வினை வழங்க வேண்டும்.
இளைஞர் பாராளுமன்றத்திலும் அரசியல் நுழைந்துள்ளது. இதிலும் தற்போது அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனை மக்களுக்கு வெளிவேடம் காட்டத்தான் செயற்படுத்தியுள்ளனர். அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை.
எனவே, நாம் பாரிய இளைஞர் அலையை உருவாக்கி இளையோர்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளை இல்லாதொழிக்க அணிதிரள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment