தமிழக பத்திரிகையொன்றுக்கு வழங்கிய கருத்து தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் உடல் நலக்குறைவு காரணமாக நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் சகோதரர் ரியாஸ் சாலி
தெரிவித்தார்.
இதேவேளை, அஸாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment