ஹாலிவுட் சினிமாவை மிஞ்சிய அதிரடி. ஐந்து நிமிடத்திற்குள், யாருக்கும் தீங்கு செய்யாமல் பெல்ஜியம் விமான நிலையத்தில் நடந்த மிகப்பெரும் கொள்ளை.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமானநிலையத்தில், வைக்கப்பட்டிருந்த 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்ட்வெர்ப் நகரிலிருந்து, ஜுரிச் நகருக்கு எடுத்துச் செல்வதற்காக பட்டை தீட்டப்படாத வைரங்கள், கடந்த மாதம் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தது. அந்த வைரங்களுடன் சுவிட்சர்லாந்து நாட்டு விமானமும் புறப்படுவதற்காக விமான தளத்தில் தயாராக இருந்தது.
அப்போது, காவல்துறையினர் போல் உடையணிந்தும், முகமூடிகளால் முகத்தை மறைத்தும் வந்திருந்த ஒரு கும்பல், பாதுகாப்பு வேலியை விலக்கி, விமானத் தளத்திற்குள் வந்துள்ளது. பாதுகாப்புத் தடைகளை மீறி, ஹெல்வெடிக் ஏர்வேஸ் விமானம் நின்றிருந்த பகுதியை அந்தக் கும்பல் அடைந்தது. விமானத்தில் உடைமைகள் இருக்கும் பகுதியைத் திறந்து, வைரங்கள் இருந்த பெட்டியிலிருந்து, 120 பொட்டலங்களை எடுத்துக்கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றுள்ளது.
ஐந்து நிமிடத்திற்குள் இந்த செயல்கள் நடந்து முடிந்துள்ளன. யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாமல், துப்பாக்கிகள் பயன்படுத்தப்படாமல் இந்தக் கொள்ளை நடந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய கொள்ளைகளுள் ஒன்றாக, அந்த சம்பவம் கருதப்பட்டது.
இந்த கொள்ளையர்களை பிடிக்க பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் நாட்டுக் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில், கொள்ளையர்களில் ஒருவன் பிரான்சிலும், 6 பேர் சுவிட்சர்லாந்திலும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மீதி 24 பேர் இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான பணமும், வைரங்களும் மீட்கப்பட்டுள்ளன
No comments:
Post a Comment