'இயற்கையின் விடுகதைக்கு இயற்கையே விடை'; ஒலுவிலில் நிகழ்ந்த அதிசயம்(வீடியோ)
இயற்கையின் புரியாத புதிர்களுக்கு இயற்கையே பதிலாக அமைந்துவிடும் அரிய சந்தர்ப்பங்களும் எமது வாழ்நாளில் நிகழ்கின்றமை கண்கூடு.
இயற்கையின் விடுகதைக்கு இயற்கையே விடை பகரும் இந்த சம்பவம் அம்பாறை ஒலுவிலில் பதிவாகியுள்ளது.
தீவிரமான கடலரிப்பு ஒலுவில் கடற்கரையை கபளீகரம் செய்தமை தொடர்பில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சமூகப் பொறுப்புடன் சுட்டிக்காட்டியிருந்தோம்.
நியூஸ்பெஸ்ட்டின் சமூகப் பொறுப்புணர்ச்சியுடண் கூடிய இந்த செய்தி அறிக்கையிடல் குறித்து அதிகாரிகள் பாராமுகமாகவே இருந்தனர்.
எனினும் கடற் கரையை ஆக்கிரமித்து போட்ட சிக்கல் நிறைந்த முடிச்சை கடலே இன்று அவிழ்த்து வருகின்றது.
ஒலுவிலில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்று இயல்பு நிலையை அடைந்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
No comments:
Post a Comment