Pages

Apr 14, 2013

அம்பியுலன்ஸ் வண்டி விபத்தில் மூவர் காயம்


மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் அம்பியுலன்ஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் உட்பட மூவர் காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டஸ்பி தோட்டத்திற்கு சொந்தமான இந்த அம்பியுலன்ஸ் வண்டி நேற்று இரவு கர்ப்பிணி தாய் ஒருவரை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு மீண்டும் ஸ்டஸ்பி தோட்டத்திற்கு திரும்பும் வழியில் பார்கோ தோட்டத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அம்பியுலன்ஸ் வண்டி பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனரும் மேலும் இருவரும் காயமடைந்துள்ளனர். இவர்களை மஸ்கெலியா பொலிஸாரும் பிரதேச வாசிகளும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

விபத்து தொடரபில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment