செங்கலடியில் கணவன், மனைவி வெட்டி கொலை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி செங்கலடி பிரதேசத்திலுள்ள ஒரு வீட்டில் இன்று
அதிகாலை ஒரு மணியளவில் கணவன், மனைவி இருவரும் வெட்டி கொலை
செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி வெட்டி கொலை செய்யப்பட்ட இருவரும்
செங்கலடி நகரில் சிப்றா பென்சி கோணர் வர்த்தக நிலைய உரிமையாளரும் அவரது
மனைவியும் என பொலிசார் அடையாளர் கண்டுள்ளனர்.
இதில் சிவகுரு ரகு
வயது 48 மற்றும் இந்திரமூர்த்தி வித்ரா வயது 41 ஆகிய இருவருமே வெட்டி கொலை
செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பிரதேசத்தில் பொலிசார் குவிக்கப்பட்டு
விசாரணை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment